
மிகப்பெரியதாய் உணரும் சில கணங்களை
தலைகீழாய் உருட்டித் தள்ளிவிடுகிறதுன் ஞாபகங்கள்
சிறு மணல் வீடு கட்டும் குழந்தையென
அலைவருமுன்னே ஆர்ப்பரிக்கின்றதென் மனது
உனக்காக உருவகிக்கும் கணங்களுக்கென.
நின்று துடிக்கும் இதயத்தை
ஓசையின்றி அடக்கிவைக்க
இயலாததின் இயலாமையில்
தினமும் கழிகிறதென் நாட்கள்
என்றேனும் ஒரு நாள் நிறைவேறக்கூடும்
நீ என்னவென்று நானுனக்கு சொல்லும் நாள்
அன்று தான் நான் மீண்டு வருவேன்
எனக்கான என்னை நோக்கி.
பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளின் சுகம்
தேக்கிவைத்துக்கொள்வதில் இல்லைதானே...
5 comments:
என்றேனும் ஒரு நாள் நிறைவேறக்கூடும்
நீ என்னவென்று நானுனக்கு சொல்லும் நாள்
அன்று தான் நான் மீண்டு வருவேன்
எனக்கான என்னை நோக்கி.]]
அருமை.
------------------------
பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளின் சுகம்
தேக்கிவைத்துக்கொள்வதில் இல்லைதானே...]]
மிகச்சரி - அது தானே வடிகால் ...
கவிதை நன்றாக இருந்ததுங்க!
//பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளின் சுகம்
தேக்கிவைத்துக்கொள்வதில் இல்லைதானே...//
:)
அருமைங்க
பூங்கொத்து கிருத்திகா!
என்றேனும் ஒரு நாள் நிறைவேறக்கூடும்
நீ என்னவென்று நானுனக்கு சொல்லும் நாள்
அன்று தான் நான் மீண்டு வருவேன்
எனக்கான என்னை நோக்கி.
அழகான வரிகள். முதன் முதலில் ஒரு வலை தளத்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக படித்திருக்கிறேன். படித்த பின் , சன்னலோர இருக்கை கிடைத்த பிரயாணி போல மகிழ்ச்சியாய் உணர்கிறேன். தொடர்ந்து எழுதங்கள்.
Post a Comment