Wednesday, April 8, 2009

முகமூடிக்கவிதைகள் - 7

அழு
ஆவேசப்படு
அடங்கு
அடுத்த வேளை
சோற்றுக்காக
அனுசரித்துப்போ

நின்று சிரித்து
வெளுக்கும்
மானுடத்தின் சாயம்

********************

மீண்டும் மீண்டும்
நுகரத்துடிக்கும்
பூவின் மணம் போல
எப்போதும்
பேசத்துடித்திருக்கும் மனது

எட்டிப்பார்த்து பின்
தட்டிக்கேட்டதும்
உள்ளடங்கிப்போகும்
உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாள் ஆச்சி(முகமூடி)
இருங்க படிச்சிட்டு வாறேன்

narsim said...

கவிதை,புதுடெம்ப்ளேட் ரெண்டும் அருமை

ஆ.சுதா said...

உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ

அப்படிதானிருக்கின்றது எல்லோருக்கும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒவ்வொரு கவிதையும்
நிதர்சனத்தின் நிஜ்மாய்

ரொம்ப பிடித்திருந்தது.

முகமூடி படம் கேட்ச்சிங்க்.

v.pitchumani said...

nice
v.pitchumani
http://manimalar.wordpress.com

மேடேஸ்வரன் said...

nice

திவாண்ணா said...

முகமூடி எங்கிருந்து? நல்லா இருக்கு.
பக்கத்தோட செட்டிங்க் எல்லாம் மாத்திடீங்களோ?
அடர்ந்த பழுப்பு பின்புலத்தில எழுத்தெல்லாம் தெரியவே இல்லை.

திவாண்ணா said...

உங்களுக்கு ஒரு பஞ்சிங்க் பாக் வேணும்! ;-))

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி, ஜமால், நர்சிம், ஆ.முத்துராமலிங்கம், அமித்துஅம்மா, பிச்சுமணி மற்றும் மேடேஸ்வரன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க திவா.. உங்க முதல் கமெண்ட்டுக்கு பதில்.
வெள்ளை பிண்ணணில கருப்பு கலர் எழுத்து தானே செட் பண்ணியிருக்கேன்.. "அடர்ந்த பழுப்பு பின்புலத்தில எழுத்தெல்லாம் தெரியவே இல்லை" எதைச்சொல்றீங்கன்னு புரியலை கொஞ்சம் சொல்லுங்களேன்...

அப்புறம் உங்க ரெண்டாவது கமெண்டும் புரியலை.....விளக்கம் பிளீஸ்...

திவாண்ணா said...

//வெள்ளை பிண்ணணில கருப்பு கலர் எழுத்து தானே செட் பண்ணியிருக்கேன்.. "அடர்ந்த பழுப்பு பின்புலத்தில எழுத்தெல்லாம் தெரியவே இல்லை" எதைச்சொல்றீங்கன்னு புரியலை கொஞ்சம் சொல்லுங்களேன்...//

திருப்பிப்போய் பாத்தேன். படங்களை தடுக்கச்சொல்லி அமைப்பு வெச்சு இருந்ததாலே அது வெள்ளையா காட்டலே. கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. முன்னிருப்பா யாரும் கருப்பை பின்புல நிறமா செட் செய்வாங்களோ? டெம்ப்லேட் போட்டவர் அப்படித்தான் செய்து இருக்கார்.

திவாண்ணா said...

ஒரு punching bag.
tension ரிலீஸ் ஆக!
:-))

ஜீவி said...

//உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.//

-- இது தான் இயற்கை.
வடிகால் இல்லாத எதுவும் தேங்கிப் போய் தீங்கு விளைவிக்கும் என்பதால், இருப்பதே ஆரோக்கியம்.
சிந்தனையின் அழகான வெளிப்பாடு
பிறரிடமும் தொற்றிக் கொண்டு ஊருக்கு உலகுக்கு உதவும் செயலாய் மாறிப் போகும்.
இறைவனின் அருள் கொடையும் இதுவே.

அழகான கவிதை ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்..

பாச மலர் / Paasa Malar said...

கடைசி வரிகள்..வடிகால்...நன்றாய் இருக்கிறது கிருத்திகா...