Monday, January 26, 2009

பட்டாம்பூச்சி விருது


ஆஹ எனக்கும் பட்டாம்பூச்சி விருது கொடுத்துட்டாங்க நம்ம பாசமலர்இதை விருதென்று சொல்லுவதை விட நட்புக்கான அங்கீகாரம் என்று கருதுவதே எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.

என் பங்களிப்பாக இவர்களோடு இதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

திவா -எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், பின்னூட்டங்களுக்கான உழைப்பின்றி கடமையைச்செய் பலனை எதிர்பாரேதே எனும் கீதா வாக்கியத்திற்கிணங்க பல சத்தியங்களை தெளிவுபடுத்தும் பதிவுகள்.

மங்கை - குறைவாகவே எழுதினாலும், நிறைவாக எழுதும் இவரது பக்கங்கள் அதிமுக்கியமானவை. தன் மேதாவிலாசங்களுக்கான சுய தேடலின்றி, சமூக அக்கறையுள்ள எழுத்துக்களே இவரது பதிவின் பக்கங்கள்.

பூ வனம் -ஆத்மார்த்தான எழுத்துக்கள், நம்முள்ளே நம்மை பரீட்சை செய்து பார்க்க உதவும் சிந்தனைகள் என இவரது வலைப்பதிவுகள் அனைத்துமே நான் ஒரு போதும் தவற விட விரும்பாத வகை.

இதற்கென சில விதிகளும் உளதாம்.
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)



12 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்!
பட்டாம் பூச்சி விருது
கிடைத்ததற்கு

தேவா.........

TamilBloggersUnit said...

we are invite you to join now in bloggers unit!

மங்கை said...

:).. thanks

தமிழ் said...

விருதுப் பெற்ற உள்ளங்களுக்கு

வாழ்த்துகள்

narsim said...

வாழ்த்துக்கள்

sury siva said...

ஒரு காரியம் செய்யும்பொழுது அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது உள்ளத்தே
ஏற்படும் உவகை சொல்லுக்கு அப்பால் ஆனது.

தாங்கள் பெற்ற விருது தங்கள் வலைக்கு வருவோரையும் மகிழ்வுறச்செய்கிறது.


சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, அமெரிக்கா.
வருக்:

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ஜமால். அதிரை ஜமாலும் நீங்களும் ஒன்னுதான் வலைச்சரத்தை பார்த்தபின் தான் தெரிஞ்சிகிட்டேன்... :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி தேவா, திகழ்மிளிர், நர்சிம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சூரிசார், "தாங்கள் பெற்ற விருது தங்கள் வலைக்கு வருவோரையும் மகிழ்வுறச்செய்கிறது"
இதைப்படிக்கறதுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு. நன்றி... எப்போ ஊர் திரும்பறீங்க..

anujanya said...

வாழ்த்துகள் கிருத்திகா. நீங்கள் சொல்வதுபோல் இவை நட்பின் அங்கிகாரம் என்றே சொல்லவேண்டும். அறிமுகங்களுக்கு நன்றி.

அனுஜன்யா

திவாண்ணா said...

மேலே பறக்க விட்டாச்சு!
http://anmikam4dumbme.blogspot.com/2009/01/blog-post_2871.html