Sunday, December 28, 2008
எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்?
ஊருக்கே ஏசி போட்டா எப்படி இருக்கும்?
தமிழ் நாட்டுல கலப்படமில்லாத நல்ல சாட் ஐட்டம் கிடைச்சா எப்படி இருக்கும்?
3 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 30 ரூபால வாடகை டாக்ஸில கடக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?
அப்பப்ப சூடா ரசகுல்லா சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இஷ்டத்துக்கு மீட்டா தை என்று சொல்லப்படும் இனிப்பு தயிர் சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இதோடு கூட இலக்கிய + தெய்வீகமான அனுபவமும் கிடைச்சா எப்படி இருக்கும்?
இத்தனைக்கும் மேல உக்கார வைச்சு மூணு வேளையும் விதம் விதமா சாப்பாடு போட்டா எப்படி இருக்கும்?
சரி ரொம்ப நான ரொம்ப மொக்கல..(அதாவது மொக்கை போடல)
நான் இப்ப கொல்கத்தால இருக்கேன்.....
சென்னைல கடும் வெயில் இல்லாட்டா மழைன்னு இருக்கற நம்ம மாதிரி பாவப்பட்ட ஜனங்களுக்கு எப்பவும் கம்பளி சட்டை போட்டு கால்ல சாக்ஸ்னு சொல்லப்படும் காலுறை போட்டுகிட்டு மிதம்/அதிகமான குளிர்ல ரோட்டுல நடக்கனும்னா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு சொல்லித்தான் தெரியனுமா???
கொஞ்ச நேரம் தலையில் மறைப்பின்றி வாசலில் நின்றால் போதும் உள்ள வந்து தும்மி கிட்டே இருக்கலாம்(என் பெரிய பையன் அனுபவம் அவனுக்கு சைனஸ் தொந்தரவு) உடம்பெல்லாம் சில்லுனு, நடந்து கிட்டே இருந்தா தப்பிச்சோம்। (அதாவது தொடர்ந்து ஆக்டிவா இருந்து கிட்டே இருக்கனும்) கொஞ்சம் சோம்பேறி, தூக்கம் வருதேன்னு தூங்கிப்போயிட்டோமின்னா எழுந்திருக்கும் போது கூடவே காய்ச்சல் வந்த மாதிரி ஒரு உணர்வு॥ அப்பப்பா வார்த்தைல சொல்ல முடியல அந்த உணர்வை। ரொம்ப சுகமா நல்ல அனுபவமா இருக்கு. இதுல கொடுமை என்னான்னா என் சின்னப்பையனுக்கு இங்கயும் ராத்திரி தூங்கறதுக்கு ஃபேன் வேண்டியிருக்கு (???)
அக்கா ரொம்ப அருமையா உக்கார வைச்சி சாப்பாடு போடறாங்க கூடவே சின்ன சின்ன ஷாப்பிங், அங்க நடக்கற ஆன்மீக, இலக்கிய கூட்டங்களுக்கு போற வாய்ப்பு இப்படியாகத்தானே என் 2008 வருஷக்கடைசி போயிட்டு இருக்கு.
போட்டா இல்லாத பதிவு போட முடியுமா அதனால அங்க நடந்த ஐய்யப்பா சமூகத்திலேர்ந்து நடத்திய சாஸ்தா பிரதி முடிவு அன்னிக்கு நடந்த கோலகலத்திலேர்ந்து சில போட்டோ. நாம இருக்கறது தமிழ்நாடா, கேரளாவா இல்லை மேற்கு வங்கமான தெரியாத அளவுக்கு நம்மை மறக்கடிச்சிட்டாங்க ரொம்ப இனிமையான அனுபவம். தன் வயது மறந்து, வேலை மறந்து, சொந்த இன்ப துன்பங்களை மறந்து எல்லோரும் ஒன்று கூடி இருந்த அந்த இனிமையான உணர்வுகளோட சங்கமத்தை பார்க்கும் போது நாமெல்லாம் சொந்த ஊரு மாநிலத்தை விட்டு போனத்தான் இத்தனை ஒற்றுமையா இருப்போமோன்னு தோன்றியது.
வாழ்க மானுடம்.
அப்ப வருஷக்கடைசிக்கு ஒரு பதிவு போட்டாச்சு.... அடுத்த வருஷம் சந்திக்கலாம் நன்பர்களே..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஹ.. ஹ.....
உலகம் ரொம்ப பெரிசிங்க
கொல்கத்தாலே இருக்கீங்களா?இல்லை கேரளாவிலா???
அன்புடன் அருணா
ஆமாம் சுரேஷ்..உலகம் பெரிசுதான் :)
அன்புடன் அருணா... இப்ப கொல்கத்தால தான் இருக்கேன். விடுமுறைக்காக சென்றிருக்கிறேன்...
இ. க க்கு அ.க பச்சை... ;)) சென்னை மாதிரி வருமா!
பி.கு நான் சென்னை பிரியன் :)
எனக்கு தமிழ்நாட்டை தவிர எல்லா இடமும் நல்லாயிருக்கிற மாறியே ஒரு பீலிங்...
கல்கத்தா மட்டும் சென்றதில்லை. கண்டிப்பாக போக வேண்டும். பதிவிற்கும் தகவலுக்கும் நன்றி தோழி..
புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.
வாழ்த்துக்கள்
கொல்கத்தாவில் கேரள அழகி(?)களா
"எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்?"
கல்கத்தாசென்றதில்லை.
அப்படியொரு காலநிலையில் இருக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். சென்னையில் கடும் வெயிலடிக்கும் மாதங்களில் கேரளா போனால் நானும் அப்படி உணர்வதுண்டு. வெயிலும் இல்லாமல் அதிக குளிரும் இல்லாமல் இதமாக இருக்கும் நேரம் உலகமே அழகாகிவிடுகிறது. யாருடனும் கோபித்துக்கொள்ளக்கூட முடிவதில்லை. இன்றைக்கு அதாவது ஏழாம் திகதி சென்னை அப்படித்தானிருக்கிறது. சென்னைக்குத் திரும்பியிருந்தால் நீங்களும் உணர்ந்துகொண்டிருப்பீர்கள்:)
வருகைக்கு நன்றி
நாட்டி, வண்ணத்துப்பூச்சியார், அதிரைஜமால், தமிழ்ப்ளாகர்யூனிட் (இது என்ன பேருங்க) .
ஆம்தமிழ்நதி.
புது வருட வாழ்த்துகள் கிருத்திகா..
//அந்த இனிமையான உணர்வுகளோட சங்கமத்தை பார்க்கும் போது நாமெல்லாம் சொந்த ஊரு மாநிலத்தை விட்டு போனத்தான் இத்தனை ஒற்றுமையா இருப்போமோன்னு தோன்றியது.//
அனுபவத்தில் கண்ட, காணும் உண்மை கிருத்திகா இது..
Post a Comment