
அந்த மின்சார தொடர்வண்டியின் கூட்ட நெரிசலில் அவள் எனக்கு வித்யாசமாய் தெரிந்த காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போதே நான் இறங்குவதற்கான நிறுத்தம் வந்துவிட்டது. நான் இறங்கும் போதும் அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் இறங்கினேன், அவள் முகத்திலும் ஒரு குழப்பம். ஒரு வேளை நான் ஏன் மீண்டும் மீண்டும் அவளை உற்றுப்பார்க்கிறேன் என்று நினைத்து குழம்பியிருக்ககூடும் ஆனாலும் அவள் வெகு இயல்பாய்த்தானிந்திருந்தாள்.
வழி நெடுக யோசித்துக்கொண்டே வந்தேன் எதனால் அவளெனக்கு வித்யாசமாய்த் தெரிந்தாள்.
உடை ஏதாவது வித்யாசமாய் அணிந்திருந்தாளா – இல்லை சொல்லப்போனால் மிகச்சாதரணமாய் மஞ்சள் சிவப்பு பார்டர் பாலியிஸ்டர் பட்டுப்புடவைதான் கட்டியிருந்தாள்.
ஏதாவது புதியதாய் கையில் வைத்திருந்தாளா - இல்லை ஒரு சிலரைப்போல் அவளும் பூக்கட்டிக்கொண்டுதான் இருந்தாள்.
பெரும் தலைவலி தீர்ந்தது போல் ஒரு நிம்மதி.
ஏதாவது காஸ்மெட்டிக் கம்பெனிகளின் விற்பனை பிரதிநிதியாய் இருக்குமோ அப்படியானல் அந்தப்புடவை ஒத்து வரவில்லை
இப்படி கேள்விகள் பலநாட்கள் அவ்வப்போது தலை தூக்கினாலும் மீண்டும் அவளை காணசந்தர்ப்பம் அமையாததினால் அது மெதுவாக மூளையின் வழக்கமான ஞாபகக்குவியல்களில் ஒன்றாகிப்போனது மீண்டும் ஒரு நாள் அவளைக்காணும் வரை.
இந்த முறையும் அப்படியே ஆனால் அவள் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டாள் புன்னகைக்கவும் செய்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாகிப்போனது. என் உள் மன ஓட்டங்களை அவள் அறிந்து கொள்வாளோ என்று மிகவும் பயமாய் போனது வலுக்கட்டாயமாய் நெரிசலுக்குள் என்னைத்திணித்தபடி அவள் பார்வையில் இருந்து என்னை மறைத்துக்கொண்டேன்.. ஆனால் கேள்விகள் முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதுவும் விடைகிடைக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாத ஆதங்கத்தோடே எழ த்துவங்கியது..
அடுத்த முறை என்ன செய்வேன்…..