Saturday, December 20, 2014

அஷ்டபதி – 2 – ஸ்ரித கமலாகுச – யது குல நாயகன்

śrita-kamalā-kuca-maṇḍala dhta-kuṇḍala e
kalita-lalita-vana-m
āla
jaya jaya deva hare

மலர்ந்த தாமரை போன்ற பாதங்களை கொண்டவனே, அழகிய அணியாக காதில் குண்டலங்களை அணிந்திருப்பவனே, வனத்தில்  அன்றலார்ந்த நறுமணமிக்க மலர்களை மார்பினில் மாலையாக சூடி இருப்பவனே – கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்.

dina-mai-maṇḍala-maṇḍana
bhava-kha
ṇḍana e
muni-jana-m
ānasa-hasa
jaya jaya deva hare ||1|
சூரியனைபோன்ற பிராகசமான வதனத்துடன் உன் அன்பான பார்வை கொண்டு பாலையும் நீரையும் தெளிந்தறியும் திறனுள்ள அன்னத்தைபோன்ற வாழ்வை கொண்டிருக்கும் ஞானியர்க்கு உய்விக்கும் வழியை நல்குபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்  

kāliya-via-dhara-gañjana
jana-ra
ñjana e
yadukula-nalina-dine
śa
jaya jaya deva hare
கொடிய விஷமுள்ள சர்ப்பமான காளிங்கனை சம்ஹரித்தவனே, எல்லா மனிதர்களுக்கும் உவப்பானவனே, யதுகுலத்து நாயகனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

madhu-mura-naraka-vināśana
garu
āsana e
sura-kula-keli-nid
āna
jaya jaya deva hare ||3||
மது, முரா, நரகாசுரா ஆகிய அரக்கர்களை அழித்தவனே, கம்பீரமான கருட வாகனத்திலமர்ந்தவனே, உலகின் எல்லா உன்னதமான சந்தோஷங்களையும் தருபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

amala-kamala-dala-locana
bhava-mocana e
tribhuvana-bhuvana-nidhāna
jaya jaya deva hare ||4||
மலர்ந்த தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவனே, கண்ட மாத்திரத்தில் சகல பாவங்கலிளிருந்தும் முக்தி அடையச் செய்பவனே மூவுலகங்களையும் ஆள்பவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

janaka-sutā-kta-bhūaa
jita-d
ūaa e
samara-
śamita-daśa-kaṇṭha
jaya jaya deva hare ||5||
தசமுகனான இராவணனை வென்ற ஒப்பற்ற ஜனக குமாரனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

abhinava-jala-dhara-sundara
dh
ta-mandara e
śrī-mukha-candra-cakora
jaya jaya deva hare ||6||
கார்மேக வர்ணனே, மந்தர மலையை தாங்கியவனே, சந்திர வதனனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

tava caraa praatā vayam
iti bh
āvaya e
kuru ku
śala praateu
jaya jaya deva hare ||7||
குரு குலத்தோன்றலே, உன் காலடிகளில் என்னை சமர்ப்பிக்கிறேன் கருணை கொண்டு எனை எடுத்தாளு - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

śrī-jayadeva-kaver ida
kurute mudam e
ma
galam ujjvala-gīta
jaya jaya deva hare ||8||
இந்த ஜெயதேவன் இயற்றிய அன்பால் ஒளிர்கின்ற பாமாலையை உனக்கு அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வாய் - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

 

Wednesday, December 17, 2014

அஷ்டபதி - 1 - பிரளய பயோதிஜலே - அண்டத்தை ஆள்பவன்


 
Pralaya-payodhi-jale dhruta vanasi vedam
Vihita-vahitra-charitramakhedam
Keshava dhruta-meena-sarira jaya jagadisa hare 1
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே, மச்சமாக (மீனமாக) உருவெடுத்து வந்து வேதங்களை பிரளய காலத்தில் ஊழியில் இருந்து படகைக் கொண்டு மீட்பதுபோல் காத்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Kshitirathi vipulatare tisthtati tava prushte
Dharani-dharana-kina-chakra-garishte ,
Keshava dhruta-kachapa-sarira jaya jagadisa hare 2
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வாசுகியை கயிறாக்கி  வடகரையை மத்தாக்கி இந்த உலக நன்மைக்காக அமிர்தம் கடையும் பொழுது அந்த மிகப்பெரும் மலை அமிழ்ந்து போகாது கூர்மமாக (ஆமையாகவந்து) வந்து அந்த மாபெரும் மலையை ஒரு சக்கரத்தைப் போல சுழலச்செய்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Vasati dasana-sikhare dharani thava lagna
Sasini kalanka-kaleva nimagna
Keshava dhruta-sukara-rupa jaya jagadisa hare 3
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வராகமாக வந்து இந்த பூமி உருண்டையை உன் தந்தத்தினால் தாங்கி நிலவுக்குள் இருக்கும் நிழலைப் போல காத்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Thava kara-kamala-vare nakha madbhuta-srngam
Dalita-hiranyakasipu-thanu-bhrngam
Keshava dhruta-narahari-rupa jaya jagadisa hare 4
கேசவா, இந்த மிகப்பெரும் பால்வெளியை ஆள்பவனே நரசிம்ஹமாக வந்து உன் தாமரை போன்ற கைகளில் உள்ள கூர்மையான நகங்களையே கொடூரமான ஆயுதமாக்கி ஹிரண்யகசிபுவை கிழித்து எறிந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Chalayasi vikramane balimadbhuta-vamana
Pada-nakha-nira-janita-jana-pavana
Keshava dhruta-vamana-rupa jaya jagadisa hare 5
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வாமனனாக வந்து உன் பெரும் புண்ணிய பாதங்களின் மூன்றடி மூலமாக மஹாபலியை சாமர்த்தியமாக வீழ்த்தியவனே இந்த உலகினரின் அனைத்து பாவங்களையும் கழுவும் வல்லமை படைத்த கங்கையை உன் கால் நகங்களிலிருந்து தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Kshatriya-rudhira-maye jagad-apagata-papam
Snapayasi payasi samita-bhava-tapam
Keshava dhruta-bhrgupati-rupa jaya jagadisa hare 6
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பரசுராமனாக அவதரித்து இந்த உலகோரின் பாவங்களை உன் ஷத்ரிய இரத்தத்தினைச்சிந்தி துடைத்து வாழும் வழிசெய்து தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Vitarasi dikshu rane dik-pati-kamaniyam
Dasa-mukha-mauli-balim ramaniyam
Keshava dhruta-rama-sarira jaya jagadisa hare 7
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே ராமனாக அவதரித்து  தசமுக இராவணனை அழித்ததின் மூலம் இந்த உலகிற்கு நன்மை தீமைகளை வழிகாட்டித் தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Vahasi vapusi visade vasanam jaladabham
Hala-hati-bhiti-milita-yamunabham
Keshava dhruta-haladhara-rupa jaya jagadisa hare 8
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பலராமனாக அவதரித்தா போது யமுனை உன் பராக்கிரமம் அறியாது உனது ஆணைக்கு கீழ் படிய மறுத்து  பின் உனை உணர்ந்து உன் ஆயுதத்தின் மகிமையுனர்ந்து தன்னை சரணாகதி செய்து உனக்கு நீல நிற துகிலை அளிக்கச் செய்தவனே ,  அந்த துகிலை உன்னுடைய வெண்ணிற உடலில் அணிந்து தேவலோக வெள்ளை யானையைப் போல் ஒளிவிட்டவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Nindasi yajna-vidher ahaha shruti-jatam
Sadaya-hrdaya darsita-pasu-ghatham
Keshava dhruta-buddha-sarira jaya jagadisa hare 9
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பூத உடம்பெடுத்து  கிருஷ்ணனாக அவதரித்து ஜீவ உயிர்களை பலியாக்குவதிலிருந்து காத்து சகல உயிர்களையும் இரட்சித்தவனே  உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Mleccha-nivaha-nidhane kalayasi karavalam
Dhumaketum iva kim api karalam
Keshava dhruta-kalki-sarira jaya jagadisa hare 10
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே கலியுகத்தின் முடிவில் உன்னுடைய கூர் வாள் கொண்டு உலகின் சகல அசுத்தங்களையும் எரிதழல் போன்ற உன் சொருபத்துடன் அழிப்பவனே  உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Sri-jayadeva-kaver idam uditam udaaram
Srunu sukha-dam subha-dam bhava-saram
Keshava dhruta-dasa-vidha-rupa jaya jagadisa hare 11

இவ்வாறு இந்த ஜெயதேவனுக்கு உன் மேலான தசாவதார மகிமைகளை உணரச்செய்தவனே நீயே இந்த உலகை வெற்றி கொள்பவன்..
 
 இந்த இசை காணொளியை இணையத்தில் பதிந்திருக்கும்  திரு ராமசந்திரன் - எஸ்  அவர்களுக்கு என் நன்றி.

Tuesday, December 16, 2014

மார்கழியும் – ஆத்தூரும் - ஜெயதேவரின் அஷ்டபதியும் – ராதையும்



சிறு வயதில் மார்கழி மாதம் படு கொண்டாட்டமான மாதம். அதிக விடுமுறைநாட்கள், சாஸ்தா கோவிலில் ஐய்யப்ப மண்டல பூஜை, காலை வீதி பஜனை, சிவனுக்கு திருவாதிரைத் திருநாள், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, கூடவே கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் என்று மிகவும் சந்துஷ்டியான மாதங்களில் ஒன்று மார்கழி.

இதையெல்லாம் தாண்டி அநேகமாக அனைவரும் காலையில் கோவிலுக்குப் போகும் பழக்கமும் உண்டு. ஒரு சிலர் கோவிலுக்குப் போகுமுன் வீட்டில் பூஜை முடித்து விட்டு செல்வதும் உண்டு. அம்மா கண்டிப்பாக பூஜை முடித்துவிட்டுத் தான் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பார்கள். எனவே எல்லா நாளும் காலையில் குறைந்தது நாலு மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு (அக்காவின் வேலை)  வீடு துடைத்து மெழுகி கோலமிட்டு (என் வேலை), குளித்த பின் விளக்கேற்றி விட்டு நான் அக்கா அம்மா மூவரும் திருப்பாவையும், அஷ்டபதியும் பாடி பூஜை செய்து விட்டு கோவிலுக்கு செல்வோம். இருபத்து நாலு அஷ்டபதியும் முடிந்தவுடன் ராதா கல்யாணமும் உண்டு. சில சமயம் கிராமத்தில்  பலர் சேர்ந்தும் செய்வதுண்டு இல்லையென்றால்  தனித்து எங்கள் வீட்டு மட்டத்தில் செய்வதும் உண்டு. மொத்தத்தில் மார்கழி எங்களுக்கு கீத கோவிந்த மாதம்.

அஷ்டபதி பாடுவதில் பல பாணி உண்டு, அம்மா கற்றுக்கொண்டது மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் அம்மாவிடம் எங்கள் கிராமத்தில் இருந்து அனேகம் பேர் வந்து கற்றுக்கொள்வதுண்டு.  நானும் அக்காவும் எந்த ஸ்லோகமும் அம்மாவிடம் நேரடியாக கற்றுக்கொண்டது கிடையாது ஆனால் அம்மா பாடப்பாட எங்களுக்கும் பாடமாகிவிட்டது. அது மிகப்பெரும் கொடை. அதில் ஜெயதேவரின் அஷ்டபதி சிறு வயதிலிருந்தே மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

திருமணத்திற்கு பின் இந்த மாதத்தில் ஸ்ரீ வீட்டு வழக்கப்படி திருப்பாவையும் கீதையும் உரையுடன் ஸ்ரீ வாசிப்பதுண்டு. அஷ்டபதி நின்று போனது. கடந்த சில வருடங்களாக (நமக்கும் வயசாகிவிட்டதில்லையா) இது ஒரு குறையாகத் தோன்றத் துவங்கவே பாடம் மறந்து போகாமலிருக்க அவ்வப்பொழுது பாடிப் பார்ப்பதுண்டு.

இன்று அதிர்ஷ்டவசமாக நாங்கள் கற்றுக்கொண்ட பாணியில் இணையத்தில் காணொளி கிடக்கவும் ஒரு சிறு முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.

இன்றிலிருந்து ஒவ்வொரு அஷ்டபதியாக வரிகளோடும் தமிழ் அர்த்தத்தோடும் இசையோடும் பதிய முயற்சிக்கின்றேன் பெருங்கருணையின் துணைகொண்டு எப்பொழுது முடிக்க முடிகிறதோ பார்க்கலாம்.

கோவிந்தா, கிருஷ்ணா வாசுதேவா, ரிஷிகேசா பத்மநாபா, தாமோதரா  ஜெயதேவருக்கு அருளியது போல் என்னோடும் இரும்.

- எனக்குள்  எப்பொழுதும் ஒளிந்திருக்கும் ராதை இப்போது அதிகம் ஆக்கிரமிக்கிறாள்.

Thursday, December 11, 2014

அய்யா பாரதி


அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், தீபாவளி, பொங்கல், புது வருஷம், இவற்றிற்கெல்லாம் தனித்து நினைவுறுத்தும் பதிவுகளை போடுவதில் பொதுவில் எனக்கு ஒப்புமை இல்லை. எனவே கூடியவரை தவிர்த்து விடுவதுண்டு.

ஆனால் இன்று பாரதியை நினைக்காமலிருக்க முடியாது, மனதை ஆக்கரமிக்கும் எதையும் என்னால் எழுதாமலிருக்க முடியாது.

பாரதி எனும் தீ என்னை பற்றிக்கொண்டது மிகச்சிறிய வயதிலானாலும், என் பதின்மங்களில் என்னை கனன்று எ றியச் செய்தவரும் இவர்தான். என் திருமணப்பரிசாக என் உற்ற தோழன் எனக்களித்ததும் பாரதியையே. அந்த சிலை இருபத்திநாலு ஆண்டிற்குப்பின்னும் இன்றும் என் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்.( நவீன் பெங்களூர் சென்ற போது எனக்குத் தெரியாமல் தூக்கிச் சென்றதை மீட்டெடுத்து கொண்டுவந்து விட்டேன். ) அந்த அளவு என்னை உருவாக்கிய சிற்பி.

அன்று என்னை ஆட்கொண்டது அவருடைய கோபமும் ரௌத்திரமும், தமிழும், இன்று எண்ணி எண்ணி நான் வியந்து மயங்குவது அவரது ஆத்ம தரிசனத்தை. அன்று புரிந்த பால பாடல்களின் மீள் பரிமாணம் இன்று என்னை வியப்பிலாழ்த்துகிறது. என் மூத்த குடி இவரென கொண்டாட வைக்கிறது. 

பாரதி... பாரதி.. இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்...

என்ன சொல்ல வருகிறாய். இந்த வரிகளில்..

அக்னி குஞ்சொன்று கண்டேன்....
அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரதிற்குஞ்சென்று மூப்பென்றுமுண்டோ 

எது அக்னிகுஞ்சு, இருப்பின் ஒரு துளியா? பொந்தென்பது என்ன இந்த உடம்பா? எப்படி இது வெந்து தணியும் நம்மை அறிதலின் மூலமா? பிறப்பும் மூப்பும் இல்லா வெளி எது?

விகசிக்க வைக்கிரதய்யா உன் பார்வை...

உங்களுக்காக அவரது மதுரமானதொரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாம்பே ஜெயஸ்ரியின் குரலில்.
 

Tuesday, December 9, 2014

நேர்பட பேசலாம்

முகநூலில் நான் அதிகம் பார்த்து வியப்பது நட்பு வட்டங்கள் புழங்கும் தன்மையை குறித்துத்தான்.

ஒரூ சாரார் தான் சொல்வது மட்டுமே சரியெனத் தோன்றும் வண்ணம் எழுதுவதும். அதற்கு மாற்று கருத்தென ஒன்று வருமென்றால் அதைக் குறித்து விவாதிக்க மனமின்றி பொது வெளியில் அவர்களை மிகவும் எளிதாக அநாயசமாக அவமதித்து விடுகின்றனர். அப்போது இது அவர்கள் அறிந்து ஏற்றுக் கொண்ட நட்பு என்பதையும் அந்த மனிதர்களுக்கு என ஒரு பொது வெளி உண்டு என்பதையும் மறந்து ஏதோ அவரவர்கள் வீட்டு வரவேற்ப்பரையில் அந்த இருவர் மட்டுமே இருந்து விவாதிக்கும் பொழுது கருத்து சொல்வதைப் போல பதிலளித்து விடுகின்றனர். அந்த சமயத்தில் கூட மற்றவர் முகமும் மனதும் கோணும் அளவிற்கு நாம் பேசுவதற்கு முன் யோசிக்கத்தானே செய்வோம்?

மறு சாரார் அது ஆணாகட்டும் இல்லை பெண்ணாகட்டும் ஒரு மிகச்சாதாரண கருத்துக்கு கூட, பத்திக்கு கூட ஆஹா ஓஹோ என்று ஒரு மிகப்பெரும் இலக்கிய படைப்பிற்கு நிகராக புகழ்வதும் பொது வெளி என்பதையும் மறந்து வெளிப்படையான முகஸ்துதி பாடுவதும் மிகுந்த நாடகமாகப் படுகிறது. சரி இவர்கள் மிகவும் திறந்த மனதுடையவர்கள் மிகச்சிறிய விஷயத்தையும் ஸ்லாகித்து பாராட்டி ஊக்குவிக்கும் குணமுடையவர்கள் என்று எடுத்துகொண்டால் இதை தங்கள் சொந்த வாழ்விலும் செய்கிறார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலும் பதில் இல்லை என்பதாகவே வருகிறது. அப்போது பொது வெளியில் அவர்கள்  முகமூடிகளுக்கு கிடைக்கும் மலின வெளிச்சம் பற்றிய விழிப்பு உணர்வு கூட இல்லாதவர்கள் உடனா நம் நட்பு பாராட்டுகிறோம். என்ற கேள்வியும்  எழுகிறது.அடுத்த வகை, தான் சொல்ல நினைக்கும் கருத்தை மிகவும் வேகமாக சொல்கிறேன் என்று நாலாம் தர குணமுடையவர் தெருவில் நடைபெறும் சண்டையின் பொது உபயோகிக்கும் சில தரம்குறைந்த எடுத்துக்காட்டுக்களை கையாள்வது போல வெகு இயல்பாக வார்த்தைகளை சேற்றை இறைப்பதைப் போல இறைத்துவிடுகிறார்கள் அது இன்னும் ஆச்சர்யமாக உள்ளது. இரு பாலரும் எதிர் பாலினங்களின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து மிக எளிதாக பேசுவதும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்னின் ஒழுக்க விகிதாசாரங்களை குறித்து எழுத/பேச முடியுமானால் நாம் என்ன விதமான கலாச்சாரத்தில் சிக்கியிருக்கிறோம். “Call a Spade is a spade” but we also should be careful how this is being addressed by us. இதில் நமது கண்ணியமும் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதில
அடுத்த வகை, தான் சொல்ல நினைக்கும் கருத்தை மிகவும் வேகமாக சொல்கிறேன் என்று நாலாம் தர குணமுடையவர் தெருவில் நடைபெறும் சண்டையின் பொது உபயோகிக்கும் சில தரம்குறைந்த எடுத்துக்காட்டுக்களை கையாள்வது போல வெகு இயல்பாக வார்த்தைகளை சேற்றை இறைப்பதைப் போல இறைத்துவிடுகிறார்கள்  அது இன்னும் ஆச்சர்யமாக உள்ளது.  இரு பாலரும் எதிர் பாலினங்களின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து மிக எளிதாக பேசுவதும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்னின் இரு பாலரும் எதிர் பாலினங்களின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து மிக எளிதாக பேசுவதும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்னின் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து பேசுவதை விட தாழ்வாக ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணைக் குறித்து எழுத/பேச முடியுமானால் நாம் என்ன விதமான கலாச்சாரத்தில் சிக்கியிருக்கிறோம். “Call a Spade is a spade but we also should be careful how this is being addressed by us. இதில் நமது கண்ணியமும் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதில்லையே ஏன்?


இது அவரவர் வீட்டு வரவேற்பறை தான் ஆனாலும் அதில் காமரா வைத்து உலகிற்கு பகிரத் தொடங்கியபின் சில கண்ணியப் போக்குகளை கடை பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளை நாம் அறிந்து கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது. 

நம் நம்பிக்கொண்டிருக்கும் பரந்து பட்ட விசாலமான படிப்பறிவும், அனுபவமும் சமூக அந்தஸ்த்தும் இதற்கு துணை புரியாதா?

Disclaimer J

இந்த பத்தி உண்மையாக விமர்சிப்பவர்களுக்கும் மேலே குறிப்பிட்ட அடிப்படை விதிகளை பின்பற்றுவர்களுக்கும் பொருந்தாது. இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதியதல்ல. ஏன் சொந்த வியப்பு காரணமாக  என்னில் எழுந்த கேள்வி. பொதுவில் வைக்கிறேன்.  

Friday, December 5, 2014

இங்கு துவங்கலாம் மானுடத்தை ஆன்மீகத்தை

நாம் மனிதர்கள், தொன்று தொட்டு குழுவாக சேர்ந்து வாழப் பழகியவர்கள் நொமாடியன்ஸ் வேர் நெவெர் அலோன். குழுவாக வாழ்தல், கூட்டு விவசாயம், கூட்டுக்குடும்பம் இப்படி வளர்ந்தவர்கள் நாகரீகம் கற்றவர்கள், கற்பித்தவர்கள். 

ஆனால் தனித்திரு என்று பல ஞானியர்கள் கூறுவதன் உட் பொருள் என்ன?? இந்த வாழ்க்கை தவறா? மனிதர்களை புறக்கணித்து சென்றுவிடு என்பதா? இதுதான் ஆன்மீகமா?? கேள்வி வரும்.

இல்லை,  கூடி வாழ்தலும், இணைந்து இயைந்து வாழ்தலும் புற வாழ்க்கைக்கு உண்டான காரியங்கள். அதுவே அழகு, அங்கணம் வாழ்வது கடமை, ஆனால் அகவாழ்வென்பது வேறு,  அக வாழ்விற்கு உள்ளே தனித்திருத்தலும், சுயமாய் சிந்திப்பதும் பெரும் கூட்டத்தினிடையேயும் நம் உள் மன கட்டளைகளை புரிந்து கொள்ளும் நிசப்தத்தை கொண்டிருப்பதுமே உகந்தது இதையே தனித்திரு என்கிறார்கள் அறிந்தவர்கள்.

மற்றவர்களின் பார்வைகள் நம் என்ன ஓட்டத்தை தூண்டலாம் ஆனால் கட்டுபடுத்தலாகாது. ஒருவருக்காக ஒருவர் முடிவெடுக்க  முடியுமானால் தனித்தனி மனமும் மூளையும் எதற்கு. ஒத்த எண்ணம் கொண்டிருப்பது வேறு ஒரே எண்ணம் தான் என்பது வேறு. அது தவறு..

ஒருவரைப் பற்றிய விமர்சனங்கள் கருத்துக்கள் பேசப்படும் பொழுதே இதன் அடுத்த பாகத்தை அதன் மற்றொரு முகத்தை  சிந்திக்க தவறுபவர்கள் இந்த குழு முடிவுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் ஆபத்துண்டு. எவரையும் புரிதலின்றி கேட்டறிந்தவற்றின் மூலம் தவறாகவோ சரியாகவோ உணர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.

எதையும் எவரையும் தன் சிந்தனையின் துணை கொண்டு அனுபவத்தின் பலம் கொண்டு புரிந்து கொள்ளத்துவங்கலாம்.  கோடு தாண்டி யோசிக்கலாம். சில சமயம் நம் யோசனையின் முடிவும் அதாகவே இருக்கலாம் அப்போதும் அதன் சரி தவறுகளுக்கு நாமே பொறுப்பாகலாம்.
இங்கு துவங்கலாம் மானுடத்தை,  ஆன்மீகத்தை